» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்திய நாடாளுமன்ற தேர்தல் பற்றி தவறான கருத்து: மன்னிப்பு கோரியது ‘மெட்டா’ நிறுவனம்!
வியாழன் 16, ஜனவரி 2025 9:01:47 AM (IST)
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக ‘மெட்டா’ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை நடத்தி வரும் ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘‘கொரோனாவுக்கு பிறகு 2024-ம் ஆண்டு இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் ஆளுங்கட்சிகள் தோல்வி அடைந்தன’’ என்று அவர் கூறியிருந்தார்.அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்தார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி 3-வது தடவையாக ஆட்சியை பிடித்தார் என்றும், எனவே, மார்க் ஜுக்கர்பெர்க் கூறியது தவறான கருத்து என்றும் அவர் கூறினார்.
மேலும், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே, ‘‘மெட்டா நிறுவனத்தை எனது தலைமையிலான நிலைக்குழு விசாரணைக்கு அழைக்கும்’’ என்று கூறினார். இதற்கிடையே, ‘மெட்டா’ நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் சிவநாத் துக்ரால், மார்க் ஜுக்கர்பெர்க் கருத்துக்காக மன்னிப்பு கோரினார்.
அவர் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டு தேர்தல்களில் பெரும்பாலான ஆளுங்கட்சிகள் தோல்வி அடைந்ததாக மார்க் கூறியது, பல்வேறு நாடுகளை பொறுத்தவரை சரியானதுதான். ஆனால் இந்தியாவுக்கு பொருந்தாது. கவனக்குறைவால் ஏற்பட்ட இத்தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்தியா தொடர்ந்து எங்களது முக்கியமான நாடாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் நிஷிகாந்த் துபே, மன்னிப்பை ஏற்றுக்கொண்டார். அவர் கூறியிருப்பதாவது: ‘மெட்டா’ நிறுவன அதிகாரி இறுதியாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது, இந்தியாவின் சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி. இனி, இப்பிரச்சினையில் நிலைக்குழுவுக்கு வேலை இல்லை. இதை முடிந்துபோன பிரச்சினையாக கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்
வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி: நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய ஸோரான் மம்தானி!
புதன் 5, நவம்பர் 2025 12:43:54 PM (IST)

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)




