» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டிரம்ப் சலுகை எதிரொலி : அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டாக் செயலி!
திங்கள் 20, ஜனவரி 2025 12:40:55 PM (IST)
அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் 'டிக்டாக்' செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதனையொட்டி நேற்று அமெரிக்காவில் டிக் டாக் செயலியை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு அதன் நிறுவனம் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி இருந்தது. அதில் டிக்டாக் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. டிக்டாக் செயலியை வழக்கம்போல் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டிக் டாக் சேவைக்கு தடை விதித்து அமெரிக்கா கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப், டிக்டாக் செயலி தடைக்கு 90 நாட்கள் விலக்கு அளிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக டிக்டாக் நிறுவனம் கூறுகையில், "டிக்டாக் சேவையை வழங்குவதற்கு தேவையான உத்தரவை வழங்கிய டொனால்டு டிரம்புக்கு நன்றி. நீண்ட கால தீர்வுக்கு டிரம்ப் உடன் இணைந்து பணியாற்றுவோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: 6 மாதத்தில் தேர்தல் நடத்த முடிவு
சனி 13, செப்டம்பர் 2025 10:39:31 AM (IST)

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு
சனி 13, செப்டம்பர் 2025 10:34:56 AM (IST)
