» செய்திகள் - விளையாட்டு » உலகம்
புதின் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை: டிரம்ப் எச்சரிக்கை!
புதன் 22, ஜனவரி 2025 12:28:18 PM (IST)
விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷிய மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ரஷியா - உக்ரைன் போர் குறித்து டிரம்ப் பேசியதாவது: போர் ஒருபோதும் தொடங்கி இருக்கக் கூடாது. திறமையான அதிபர் இருந்திருதால் போர் நடந்திருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைனில் ஒருபோதும் போர் நடந்திருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா போருக்கு சென்றிருக்காது. புதினுடன் எனக்கு மிக வலுவான புரிதல் இருந்தது. மக்களை அவமதித்த பைடனை புதின் அவமதித்தார்.
பைடனை எந்த நேரத்திலும் சந்திக்கத் தயார். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள், இது ஒரு கொடூரமான சூழல். பெரும்பாலானோர் ராணுவ வீரர்களாக மாறிவிட்டார்கள். நகரங்கள் இடிந்த இடங்களாக காணப்படுகிறது. உக்ரைனில் அறிவிக்கப்பட்டதைவிட அதிகளவிலான மக்கள் பலியாகியுள்ளனர். உண்மையான எண்ணிக்கையை வெளியிடாததற்கு உங்களை குறை சொல்லவில்லை, வெளியிட விரும்பாத அரசை குறை கூறுகிறேன்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதம் அளிக்கப்படுமா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. புதினுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். அமைதியை விரும்புவதாக உக்ரைன் அதிபர் என்னிடம் கூறினார். இரு தரப்பினரையும் எந்த நேரத்திலும் சந்திப்பேன். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தடுக்க விரைவில் முடிவு காண விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)
