» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈராக்கில் குழந்தை திருமண அனுமதி சட்டம் நிறைவேற்றம்: பெண் உறுப்பினர்கள் எதிர்ப்பு!
வியாழன் 23, ஜனவரி 2025 12:07:13 PM (IST)

ஈராக்கில் 9 வயது குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைக்க அனுமதி அளித்து குழந்தைகள் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டிக்கிறது.
மேற்காசிய நாடான ஈராக் பார்லிமென்டில், ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ளார். இந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு, 18 ஆக உள்ளது. கடந்த 1950ல் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டாலும், 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக, 2023 ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சமீபத்தில், ஈராக் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்தது. ஆனாலும், பெண்கள், மனித உரிமை குழுக்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும். அவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்நிலையில், குழந்தைகள் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி 9 வயது முதல் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 18 வயதில் இருந்து, 9 வயதாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு பெண் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல நாடுகளில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குழந்தை திருமண சட்டத்திற்கு ஈராக் ஒப்புதல் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)

இது தான் உண்மைJan 24, 2025 - 09:13:53 AM | Posted IP 172.7*****