» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சூடானில் டிரோன் தாக்குதலில் மருத்துவமனை இடிந்து தரைமட்டம்: 70 பேர் பலி!
திங்கள் 27, ஜனவரி 2025 8:41:45 AM (IST)
சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு குட்டி நாடு சூடான். அங்கு ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக அதிகாரப்போட்டி நிலவுகிறது. இதற்கிடையே 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மோதல் உள்நாட்டு போராக வெடித்தது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் இந்த போரில் இதுவரை சுமார் 28 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதனால் பாதுகாப்பான இடங்களைத் தேடி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளுக்கு வெளியேறி உள்ளனர். எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. அதனை பொருட்படுத்தாமல் இரு தரப்பினரும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சூடானின் எல் பஷார் நகரில் செயல்பட்டு வரும் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த மருத்துவமனை கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். எனினும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி நோயாளிகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை மீதான இந்த தாக்குதல் ஒரு போர்க்குற்றம் ஆகும் என கூறி உலக சுகாதார நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)
