» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கனடாவில் ஓடு பாதையில் சறுக்கி தலைகீழாக கவிழ்ந்த விமானம்: குழந்தை உள்பட 18 பயணிகள் காயம்!
புதன் 19, பிப்ரவரி 2025 12:12:22 PM (IST)

கனடாவில் ஓடுபாதையில் விமானம் சறுக்கியபடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 18பேர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் மினியா போலிஸ் நகரில் இருந்து கனடாவில் உள்ள டொராண்டோ நகருக்கு டெல்டா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் (சி.ஆர்.ஜெ900) ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 76 பயணிகள், 4 ஊழியர்கள் என 80 பேர் இருந்தனர். அந்த விமானம் டொ ராண்டோ விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கி யது. அப்போது அங்கு கடும் பனிப்பொழிவு இருந்தது.
இதில் ஓடுபாதையில் பனி படர்ந்து இருந்தது. மேலும் காற்றும் பலமாக வீசி கொண்டிருந்தது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கியபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் சறுக்கியபடி வேகமாக சென்றதால் தீப்பிழம்பு ஏற்பட்டது. இதில் சறுக்கியபடியே சென்ற விமானம் தலைகீழாக கவிழ்ந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் அலறினார்கள். உடனே தீயணைப்பு வாக னங்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். விமானத்தில் எரிந்த தீயை அணைத்தனர்.
தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த விமானத்தின் முன்பக்க கதவு மற்றும் அவசரகால கதவை திறந்து 80 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 18 பேர் காயம் அடைந்தனர். இதில் ஒரு குழந்தை உள்பட 3 பேரின் நிலைமை கவலை கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டொரண்டோவிலும் பனிப்புயல் வீசியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விபத்து தொடர்பாக போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் இளம்பெண் ஆணவக்கொலை: தந்தை, அண்ணனுக்கு தூக்கு தண்டனை!
புதன் 26, மார்ச் 2025 12:10:16 PM (IST)

இத்தாலியில் திருமணமாகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி : 40 ஆண்டு தடை நீக்கம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:46:25 PM (IST)

நியூசிலாந்தில் 7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:41:42 PM (IST)

மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ்
திங்கள் 24, மார்ச் 2025 5:26:06 PM (IST)

கனடாவில் நாடாளுமன்றம் கலைப்பு: முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த பிரதமர் உத்தரவு!
திங்கள் 24, மார்ச் 2025 10:07:56 AM (IST)

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மசூதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்; 44 பேர் பலி
ஞாயிறு 23, மார்ச் 2025 9:53:19 AM (IST)
