» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஷேக் ஹசீனா விவகாரத்தில் இந்தியாவிற்கு 2 முறை கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லை: வங்கதேசம்
வியாழன் 6, மார்ச் 2025 4:25:50 PM (IST)
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரிய விவகாரத்தில் இந்தியா இதுவரை பதில் அளிக்கவில்லை என்று இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் கூறினார்.

ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு வென்றவருமான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முகமது யூனுஸ் அளித்த பேட்டியில்,''ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அவர் மட்டுமல்ல, அவருடன் தொடர்புடைய நபர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள், அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோர் விசாரணை செய்யப்படுவார்கள்.
வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு எதிராக 2 முறை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரை நாடு கடத்த கோரி இந்தியாவிற்கு 2 முறை கடிதங்கள் அனுப்பி உள்ளோம். ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ பதிலும் கிடைக்கவில்லை. வங்கதேச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என்றாலும் அவர் வழக்கை சந்திக்க நேரிடும்' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)
