» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பரஸ்பர வரிகளை குறைக்க சீனா, அமெரிக்கா ஒப்புதல் : வர்த்தக போர் முடிவுக்கு வந்தது!

திங்கள் 12, மே 2025 5:03:09 PM (IST)

90 நாட்களுக்கு பரஸ்பர வரிகளை திரும்ப பெற சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. 

இதனால் அமெரிக்கா சீனாவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை 145% ஆக அதிகரித்தது. சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 125 சதவீதமாக உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் உச்சத்தில் இருந்தது. 

இந்நிலையில், தற்போது வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், 90 நாட்களுக்கு பரஸ்பர வரிகளை திரும்ப பெற சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.

மேலும், அமெரிக்கா சீனப் பொருட்களுக்கான வரிகளை 145 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக குறைக்கவும், சீனா அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த வர்த்தகம் தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory