» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா - அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் டிரம்ப் தகவல்!

வெள்ளி 27, ஜூன் 2025 5:05:09 PM (IST)



இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த "பிக் பியூட்டிஃபுல் பில்” நிகழ்வில் அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியதாவது; அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டுகிறதா? என்று கேட்கிறார்கள். அதற்கு, நேற்று தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். 

நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதில்லை. அதேவேளை சிறந்த ஒப்பந்தங்கள் எங்கள் கைவசம் உள்ளன. அவற்றில் ஒன்று விரைவில் தெரியவரும். அது இந்தியாவுடனான ஒப்பந்தமாக இருக்கலாம், மிகப் பெரிய ஒப்பந்தமாகும். மேலும், எல்லோருடனும் நாங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதில்லை. சில நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தை மட்டும்தான் அனுப்புவோம். 

25, 35, 45 விழுக்காடு வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுவோம். அவ்வாறு செய்வது மிகவும் எளிதாகும். நான் அவ்வாறு செய்வதை எனது அரசு தரப்பினர் விரும்பவில்லை. அதை ஓரளவு செயல்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கருத்து. அதேநேரம், நான் விரும்புவதைவிட அதிகமான ஒப்பந்தங்கள் ஏற்படவேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். அனைத்து நாடுகளுடனும் அமெரிக்கா நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory