» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)
தாய்லாந்தில் ராணுவ தளபதியை விமர்சித்த விவகாரத்தில் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை பணியிடை நீக்கம் செய்து அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து தாய்லாந்தின் காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதிக்கு கம்போடியா தடை விதித்தது. இதற்கு பதிலடியாக கம்போடியா உடனான அனைத்து எல்லைகளையும் தாய்லாந்து மூடியது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, கம்போடியாவின் முன்னாள் பிரதமரும், தற்போதைய செனட் சபையின் தலைவருமான ஹன் சனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ஹன் சனை அவர் உறவுமுறை கூறி அழைத்தார். மேலும் தாய்லாந்து ராணுவ தளபதியையும் விமர்சித்து பேசினார். அவர்கள் இருவரும் பேசிய இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதி எனவும், இதற்கு மன்னிப்பு கோருவதாகவும் பேடோங்டர்ன் ஷினவத்ரா கூறினார். ஆனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதனை தொடர்ந்து அவர் பதவி விலக கோரி நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பாக நாட்டின் அரசியலமைப்பு கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ஷினவத்ரா நேர்மையற்றவர் என்ற முறையில் அவரை பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் 7-2 என்ற வாக்குகளில் நிறைவேறியது.
எனவே பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை பணியிடை நீக்கம் செய்து அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுடின் சார்விரகுல் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)

மனைவி விவாகரத்தால் விரக்தி : ஓடும் ரயிலுக்குள் தீவைத்த 67 வயது நபர் கைது!
சனி 28, ஜூன் 2025 12:23:38 PM (IST)
