» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவில் நிலநடுக்கம்: ஜப்பான், சீனா, அமெரிக்கா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை!

புதன் 30, ஜூலை 2025 11:58:40 AM (IST)



ரஷியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரஷியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, பெரு, ஈக்வடார் நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தூரக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. ரஷியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரஷியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, பெரு, ஈக்வடார் நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கிரசென்ட் சிட்டி, யுரேகா பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சுனாமி எச்சரிக்கையை அடுத்து ஜப்பான் பசிபிக் கடற்கரையோரம் உள்ள நகரங்களில் 9 லட்சம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.ஹோக்கைடோ முதல் ஒகினாவா வரையிலான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி அச்சுறுத்தலால் ஜப்பானின் வடகிழக்கில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டது.

ரஷியாவின் செவெரோ-குரில்ஸ்க் மற்றும் வடக்கு ஜப்பானின் கரைகளை சுனாமி அலை தாக்கியது. அப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும், அனைத்து அவசர வழிமுறைகளையும் பின்பற்றவும் வலியுறுத்தினர்.

வடமேற்கு ஹவாய் தீவுகள் மற்றும் ரஷியாவின் கடற்கரையோரப் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. பசிபிக் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் கடற்கரைக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் இருந்து கார்களில் சாரை சாரையாக மக்கள் வெளியேறுவதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory