» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆக.1 முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வியாழன் 31, ஜூலை 2025 12:31:15 PM (IST)
ஆக.1 முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஏற்கனவே, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை, வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்த டிரம்ப், ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.
இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இன்று (வியாழக்கிழமை) இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், புதிய வரிவிதிப்பு முறையை அறிவித்து நாளை வெள்ளிக்கிழமை முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறிஇருப்பதாவது:-இந்தியா நண்பனாக இருந்தாலும், பல ஆண்டுகளாக ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே செய்து வருகிறோம். ஏனெனில் இந்தியாவின் வரிகள் மிக அதிகமாக உள்ளன. அது உலகிலேயே மிக அதிக வரிவிதிப்பாகவும் உள்ளது.
மேலும் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியா கடுமையான பணமற்ற வர்த்தக தடைகளை கொண்டுள்ளது. இந்தியா எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களில் பெரும் பகுதியை ரஷியாவில் இருந்தே வாங்கி வருகிறது. ரஷியாவிடம் இணக்கமாக இருந்து மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவராகவும் உள்ளது. இவை எல்லாம் நல்லதல்ல. எனவே ஆகஸ்டு 1 முதல் இந்திய பொரட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவும் ரஷியாவும் செத்த பொருளாதாரங்கள் : டிரம்ப் கடும் விமர்சனம்
வியாழன் 31, ஜூலை 2025 5:39:22 PM (IST)

ரஷியாவில் நிலநடுக்கம்: ஜப்பான், சீனா, அமெரிக்கா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை!
புதன் 30, ஜூலை 2025 11:58:40 AM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப் பெருமிதம்!
செவ்வாய் 29, ஜூலை 2025 5:07:25 PM (IST)

காசாவில் தினமும் 10 மணி நேரம் தாக்குதல் நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு!!
திங்கள் 28, ஜூலை 2025 11:42:11 AM (IST)

மாலத்தீவுக்கு இந்தியா ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
சனி 26, ஜூலை 2025 12:53:21 PM (IST)

கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை சொத்து மதிப்பு ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு!!
சனி 26, ஜூலை 2025 11:25:01 AM (IST)
