» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவுடனான வர்த்தக மோதல் பாதிப்பை ஏற்படுத்தும் : டிரம்ப்புக்கு நிக்கி ஹாலே எச்சரிக்கை
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:42:38 PM (IST)
இந்தியாவுடனான வர்த்தக மோதல் அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சியை சேர்ந்தவரும், ஐ. நா. சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவை ஒரு மதிப்புமிக்க சுதந்திரமான மற்றும் ஜனநாயக பங்காளியாக அமெரிக்கா நடத்த வேண்டும். இந்தியா சீனாவைப் போல ஒரு எதிரி அல்ல. இந்தியாவின் எழுச்சி சுதந்திர உலகத்தை அச்சுறுத்துவதில்லை. சீனாவின் வளர்ந்து வரும் உலகளாவிய உறவுகளை கட்டுப்படுத்த விரும்பினால் இந்தியாவுடன் நட்புறவுகளை மீண்டும் கொண்டு வருவது மிகவும் முக்கியம். வரி விதிப்பு பிரச்சினைகள் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் போரில் அமெரிக்காவின் பங்கு உள்ளிட்ட விவகாரங்களால் இரு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. ஆசியாவில் சீன ஆதிக்கத்தை எதிர்த்து செயல்படக்கூடிய ஒரே நாட்டுடனான 25 ஆண்டுகால உத்வேகத்தைத் துண்டிப்பது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சீனாவைப் போன்று பெரிய அளவில் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)




