» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வாஷிங்டனை தொடர்ந்து சிகாகோவிலும் ராணுவத்தை களமிறக்க அதிபர் டிரம்ப் முடிவு
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:53:32 PM (IST)
வாஷிங்டனை தொடர்ந்து, சிகாகோவிலும் பாதுகாப்புக்கு ராணுவத்தை களமிறக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன், சிறப்பு மாவட்டமாக உள்ளது. இதன் பாதுகாப்பு மேயரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போலீசாரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் வாஷிங்டனின் பாதுகாப்பை டிரம்ப் தன் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். நகரில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக காரணம் கூறி ராணுவத்தினரை குவித்தார்.இதே போல் கலிபோர்னி யாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கடந்த ஜூனில் புலம்பெயர்ந்தோரை கைது செய்யும் நட வடிக்கையில் குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு எதிராக கூட்டத்தினர் தாக்குதல் நடத்தினர் . இதையடுத்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு 4,000 ராணுவத்தினர், 700 கடற்படையினரை அனுப்பினார்.
தற்போது அதேபோல் இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரம், 'குற்றங்களால் குழப்பத்தில் உள்ளது, அதை சரி செய்வோம்' என அதிபர் டிரம்ப் கூறினார். இதனால் ராணுவ தலைமையகமான பென்ட கன் சிகாகோவுக்கு ராணுவத்தை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)




