» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் பிரான்ஸ் பிரதமர் பதவி விலகல்!
திங்கள் 6, அக்டோபர் 2025 4:22:32 PM (IST)
பிரான்ஸ் நாட்டில் ஓராண்டிற்குள் 4வது பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட லெகுர்னு ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகோர்னு 2025 செப்டம்பர் 9 -ம் தேதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்கப்பட்டு வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.அவர் பதவியை விட்டு ராஜினாமா செய்வதாக அறிவித்த சில மணி நேரங்களில் இந்த விலகல் அறிவிக்கப்பட்டாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரின் திடீர் ராஜினாமா பிரான்ஸ் அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அவரது பதவி விலகலை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரான்சின் அடுத்த பிரதமர் யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து, ஜனாதிபதி மேக்ரோன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. புதிய பிரதமர் நியமனம் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஓராண்டிற்குள் 4வது பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட லெகுர்னு ராஜினாமா செய்துள்ளதால் பிரான்சில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)




