» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல்!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 3:59:46 PM (IST)

2025ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான் கிளார்க், மைக்கேல் ஹெச். டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸுக்கு வழங்கப்படுவதாக அறிவியலுக்கர்ன ராயல் ஸ்வதேஷ் அகாதமி அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு, மின் சுற்று தொடர்பான ஆய்வுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எவ்வாறு, சுரங்கப்பாதைப் பணியின்போது பல காரணிகளை உள்ளடக்கிய மைக்ரோஸ்கோபிக் அளவீட்டில், எவ்வாறு கணக்கிட முடியும் என்பதை நிரூபிக்கும் சோதனைகளை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோர் ஒரு மீள்கடத்தி மின்சுற்றைப் பயன்படுத்தி இந்த சோதனையை நடத்தியிருக்கிறார்கள். ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நிகழாண்டு நோபல் பரிசு அறிவிப்பு தொடங்கியது. மூவருக்கும் நோபல் பரிசுடன் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரோனா் (சுமாா் ரூ.10.40 கோடி) பகிா்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1901-ஆம் ஆண்டுமுதல், ஸ்வீடன் நாட்டைச் சோ்ந்த விஞ்ஞானியும், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி, நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)




