» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு

வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)

அமெரிக்காவில் கொலை செய்துவிட்டு தலைமறைவான இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று எஃப்.பி.ஐ., அறிவித்துள்ளது. 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (38) என்பவர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகன் அனிசை கொன்றுவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து அமெரிக்கா புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இவர் இந்தியாவில் பதுங்கி இருப்பதாக துப்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்தியாவில் பதுங்கி இருக்கும் நசீர் ஹமீது குறித்து துப்புக்கொடுத்தால் 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.45 லட்சம்) வழங்கப்படும என்று அமெரிக்கா புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory