» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!

வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)



தாய்லாந்து, கம்போடியா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் கம்போடியாவில் உள்ள மிக பெரிய விஷ்ணு சிலை ஒன்று இடித்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு இந்தியா உட்பட பல்வேறு தரப்பினும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. இரு தரப்புமே எல்லையில் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வந்தன. இதனால் எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் போர் வெடிக்கும் சூழலும் கூட ஏற்பட்டது. 16 நாட்கள் நீடித்த இந்த கடுமையான மோதல்களில் இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள விஷ்ணு சிலை ஒன்றை தாய்லாந்து இடித்து விட்டதாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory