» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!

வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)

ரஷிய அதிபர் புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின்  கிறிஸ்துமஸ் வேண்டுதலாக இருக்கும் என்று அதிபர் ஸெலென்ஸ்கி பேசியுள்ளார்.

உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி விடியோ வெளியிட்டுள்ளார். விடியோவில் அவர் பேசியதாவது, "ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலும், மிக முக்கியமான இடங்களை ஆக்கிரமிக்கவோ குண்டு வீசவோ முடியாது. 

உக்ரைன் மக்களின் இதயம், நம்பிக்கை மற்றும் ஒற்றுமைதான் அது. இன்று, நம் அனைவருக்கும் ஒரே கனவும் வேண்டுதலும்தான் உள்ளது. அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான். ஆனால், இதனைவிட பெரிய ஒன்றை நாம் கடவுளிடம் கேட்கிறோம். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory