» செய்திகள் - விளையாட்டு » உலகம்

லடாக்கில் டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் : சவப்பெட்டியுடன் திரண்ட மக்கள்!

புதன் 14, ஜனவரி 2026 4:51:14 PM (IST)


ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு ஆதரவு தெரிவித்து லடாக்கில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், மக்களில் பொருளாதாரச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட செலவே அதிகரித்து காணப்படுவதால், ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை அந்நாட்டு அரசு களமிறக்கியுள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் சாலையில் ஒன்றுகூடி, ஈரான் அரசுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர்.

அப்போது, டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் உருவப் படம் இடம்பெற்ற சவப்பெட்டியை சாலையில் இழுத்துச் சென்று, இருவருக்கும் எதிராக முழக்கமிட்டனர். ஈரான் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாட்டின் தேசியக் கொடியையும் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுத் தலைவர்களுக்கு எதிரான போராட்டத்தால் லடாக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory