» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உகாண்டா அதிபராக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாக வெற்றி

ஞாயிறு 18, ஜனவரி 2026 12:16:51 PM (IST)



உகண்டா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் முசேவேனி தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

உகாண்டாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான யோவேரி முசேவேனி 71.65 சதவிகித வாக்குகளைப் பெற்று, 7-வது முறையாக மீண்டும் அதிபராக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 43 வயதான பாபி வைன் 24.72 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார்.

1986இல் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, யோவேரி முசேவேனி அதிபராகப் பதவியேற்றார்.  முசேவேனியின் தேசிய எதிர்ப்பு இயக்கக் கட்சி, வயது மற்றும் பதவிக்கால வரம்புகளை நீக்க அரசியலமைப்பை பல முறை மாற்றியதன் மூலம் முசேவேனியின் பதவியும் தக்கவைக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory