» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: தமிழக பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு!
திங்கள் 16, மார்ச் 2026 8:12:24 AM (IST)
நேபாளத்தில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, பக்தர்கள் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கொண்ட பக்தர்கள் குழு, நேபாளத்தில் உள்ள ஆன்மீகத் தலங்களைத் தரிசிக்கப் புனிதப் பயணம் மேற்கொண்டனர். நேற்று முன்தினம் அவர்கள் ஒரு சிறிய பேருந்தில் (Mini Bus) நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தனர். மனகாமனா கோவிலில் வழிபாட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து அன்புகைரேனி நோக்கிப் பயணித்தனர்.
பேருந்து சகித் லகான் நகராட்சியின் காந்தர் பகுதியில் வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்து முற்றிலும் உருக்குலைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நேபாள போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணியின்போது 7 பக்தர்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும், படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு, தற்போது விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் பலியானவர்களில் 3 பேர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
விபத்து குறித்து அறிந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாகச் சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரான்சில் கால்பந்து கொண்டாட்டத்தின்போது வன்முறை: 400க்கும் மேற்பட்டோர் கைது!
திங்கள் 1, ஜூன் 2026 12:51:54 PM (IST)

அணு ஆயுத தயாரிப்பைக் கைவிடாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை!
ஞாயிறு 31, மே 2026 8:56:20 PM (IST)

அமெரிக்காவில் காகித ஆலையில் நச்சு ரசாயன தொட்டி வெடித்து விபத்து - 11 பேர் பலி? மீட்பு பணிகள் தீவிரம்!
சனி 30, மே 2026 12:53:29 PM (IST)

இந்தியாவுடன் தனித்துவமான ராஜாங்க உறவு: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெகிழ்ச்சி
வெள்ளி 29, மே 2026 5:04:36 PM (IST)

காசா நகரில் இஸ்ரேல் தாக்குதல்: புதிய ஹமாஸ் தளபதி முகமது ஒடே கொல்லப்பட்டார்!
வியாழன் 28, மே 2026 8:34:43 PM (IST)

சமூக வலைத்தளங்களில் வைரலான 'டிரம்ப்' எருமை: பக்ரீத் குர்பானியிலிருந்து தப்பியது!
வியாழன் 28, மே 2026 10:32:31 AM (IST)


