» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் விவகாரத்தில் நான் சொல்வதைத் தான் நெதன்யாகு செய்வார் - ட்ரம்ப் பேட்டி!
வியாழன் 21, மே 2026 3:47:10 PM (IST)

ஈரான் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நான் என்ன சொல்கிறேனோ, அதைத்தான் முழுமையாகச் செய்வார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ஈரான் உடனான போர் உள்கட்டமைப்பு மற்றும் இஸ்ரேல் பிரதமருடனான தொலைபேசி உரையாடல் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த ட்ரம்பின் கூறியதாவது: ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் நான் என்ன பேசினேன் என்று கேட்கிறீர்கள். அவர் நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
நெதன்யாகு இஸ்ரேலில் தற்போதைய சூழலில் சரியாக நடத்தப்படவில்லை. எனக்கான மக்கள் ஆதரவு இஸ்ரேலில் 99 சதவீதமாக உள்ளதால், எனது அமெரிக்க அதிபர் பதவிக்குப்பிறகு நான் இஸ்ரேல் பிரதமராகக்கூடப் போட்டியிடலாம்." என்று ட்ரம்பின் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
"ஈரான் உடனான இந்த மோதல் மிக விரைவில் முடிவுக்கு வரும். அமெரிக்கா வியட்நாமில் 19 ஆண்டுகளும், ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் போரில் இருந்தது. ஆனால், நான் இந்த விவகாரத்தில் நேரடியாக இறங்கி 3 மாதங்கள்தான் ஆகிறது. அதிலும் பெரும்பாலான நாட்கள் தற்காலிகப் போர்நிறுத்தத்தில்தான் கழிந்துள்ளன.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தரப்பிற்கு ஒரே ஒரு இறுதி வாய்ப்பை நாங்கள் அதிகாரப்பூர்வமாக வழங்குகிறோம். இந்த விவகாரத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. ஒட்டுமொத்தமாகப் பல உயிரிழப்புகள் ஏற்படுவதை விட, குறைந்த அளவிலான இழப்புகளுடன் இப்பிரச்சினையை முடிப்பதே என் இலக்கு" என்று கூறினார்.
ஈரான் எச்சரிக்கை:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணிக் படைகள் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், இந்த முறை போர் மத்திய கிழக்கைத் (Middle East) தாண்டி உலகளவில் ஒட்டுமொத்தமாக விரிவடையும் என ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) மிகவும் கடுமையாக எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகையில், "எதிரியின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான ராணுவ நகர்வுகள், அமெரிக்கா புதியதொரு பேரழிவுத் தாக்குதலுக்குத் திட்டமிடுவதை தெளிவாகக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
அமைதி திரும்புமா? - சந்தேகம் நீடிப்பு:
இதற்கிடையே, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்று இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உத்தியோகப்பூர்வமாக முன்னெடுத்து வருகிறார்.
இருப்பினும், தங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவது, போர் இழப்பீடு வழங்குவது மற்றும் சர்வதேச வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) மீதான தங்களின் முழுக் கட்டுப்பாடு உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளையே ஈரான் தனது புதிய முன்மொழிவிலும் சமர்ப்பித்துள்ளது. இந்த நிபந்தனைகளை ட்ரம்பின் ஏற்கனவே திட்டவட்டமாக நிராகரித்துள்ளதால், சர்வதேச உள்கட்டமைப்பில் மீண்டும் அமைதி திரும்புமா என்பதில் தொடர்ந்து பெரும் சந்தேகம் நீடித்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரிவினைவாதிகளின் குற்றச்செயல்களுக்கு இடம் இல்லை: இந்தியாவிடம் நியூசிலாந்து பிரதமர் உறுதி!
செவ்வாய் 7, ஜூலை 2026 12:26:02 PM (IST)

இலங்கையில் 2-வது நாளாக நீடித்த சிறை மோதல்: 25 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!
செவ்வாய் 7, ஜூலை 2026 8:54:53 AM (IST)

நியூயார்க் புரூக்ளின் பாலத்தில் பயங்கர தீ விபத்து: சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பரபரப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 12:40:38 PM (IST)

உக்ரைனின் முக்கிய நகரைக் கைப்பற்றியது ரஷ்யா: புதின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 4, ஜூலை 2026 3:35:07 PM (IST)

அமெரிக்க மண்ணில் பிறந்தால் குடியுரிமை: நீதிமன்றம் உத்தரவு - அதிபர் டிரம்புக்குப் பலத்த பின்னடைவு!
வியாழன் 2, ஜூலை 2026 5:19:07 PM (IST)

நிச்சயமற்ற சர்வதேச சூழலில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு மிக முக்கியம்: ஜப்பான் பிரதமர் பேட்டி!
புதன் 1, ஜூலை 2026 5:04:56 PM (IST)


