» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ராணுவத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாகத் தனது அதிநவீன வான்வழி கண்காணிப்பு விமானத்தை ரஷியா அனுப்பியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டிருந்த இடைக்கால அமைதி ஒப்பந்தம், ஹார்முஸ் நீரிணை கப்பல் தாக்குதல் மற்றும் அதற்குப் பதிலடியாக அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் முறிவடைந்தது. இதனால் இரு நாடுகளும் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து வளைகுடாப் பகுதியில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுப்பதாகவும், அமெரிக்கா இனி ஹார்முஸ் நீரிணையின் பாதுகாவலனாகச் செயல்பட்டு ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் போரில் ரஷியாவும் களம் இறங்கியுள்ளது. ரஷிய அதிபர் புதின், அந்நாட்டின் அதிநவீன ராணுவக் கட்டுப்பாட்டு விமானமான ‘டூபோளேவ்-214 பி’ ரக விமானத்தைத் தெஹ்ரானுக்கு அனுப்பி வைத்துள்ளார். ‘உலக அழிவு நாள்’ (Doomsday) விமானம் என்று வர்ணிக்கப்படும் இவ்விமானம், போர் மற்றும் அவசரநிலைகளின் போது வான்வழியாக இருந்துகொண்டே ஒட்டுமொத்த ராணுவச் செயல்பாடுகளையும் வழிநடத்தும் நடமாடும் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படும் வல்லமை பெற்றது.
அதிநவீன தகவல் தொடர்பு அமைப்புகள், செயற்கைக்கோள் இணைப்புகள் மற்றும் மின்னணு போரைச் சமாளிக்கும் ‘ஜாமிங்’ எதிர்ப்புத் தொழில்நுட்பங்களைக் கொண்ட இவ்விமானம், ரஷியாவின் சிறப்பு விமானப்படைப் பிரிவால் இயக்கப்படுகிறது. அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஈரானுக்குத் தேவையான செயற்கைக்கோள் படங்கள், உளவுத் தகவல்கள் மற்றும் உயர்மட்ட ராணுவ ஆலோசனைகளை வழங்க ரஷியா இதன் மூலம் முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:39:39 AM (IST)

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:08:02 PM (IST)

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)

தாய்லாந்து பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு: ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:33:44 PM (IST)


