» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில்: முன்பதிவு தொடங்கியது!

சனி 23, செப்டம்பர் 2023 11:04:24 AM (IST)

திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நாளை தொடங்கவுள்ள நிலையில் அதற்கான கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி நாளை (செப். 24) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறாா். இந்நிலையில், வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டமாக சென்னை- திருநெல்வேலி இடையே வியாழக்கிழமையும், திருநெல்வேலி- சென்னை இடையே வெள்ளிக்கிழமையும் இயக்கப்பட்டது. 

திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில் பிற்பகல் 1.50 மணியளவில் சென்னை எழும்பூா் வந்தடைந்தது. தொடா்ந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி சென்றது. திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையிலான தொடக்க சேவை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது. 

பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கவுள்ள நிலையில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நயினாா் நாகேந்திரன், எம். அப்துல் வஹாப், நெல்லை மேயா் பி.எம். சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

கால அட்டவணை: 

தொடக்க சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாலும் பயணிகள் சேவை திங்கள்கிழமைமுதல் தொடங்கப்படவுள்ளது. இதன் முதல் பயணிகள் சேவையாக சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (எண் 20665) தாம்பரத்துக்கு பிற்பகல் 3.13 மணிக்கும், விழுப்புரத்துக்கு மாலை 4.39 மணிக்கும், திருச்சிக்கு மாலை 6.40 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு இரவு 7.56 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.40 மணிக்கும், விருதுநகருக்கு இரவு 9.13 மணிக்கும் திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்கும் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து வந்தே பாரத் ரயில் பயணிகள் சேவை புதன்கிழமை தொடங்கப்படவுள்ளது (செவ்வாய்க்கிழமை ரயில் சேவை கிடையாது). திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 20666) விருதுநகருக்கு காலை 7.13 மணிக்கும், மதுரைக்கு காலை 7.50 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு காலை 8.40 மணிக்கும், திருச்சிக்கு காலை 9.50 மணிக்கும், விழுப்புரத்துக்கு காலை 11.54 மணிக்கும், தாம்பரத்துக்கு பகல் 1.13 மணிக்கும், சென்னை எழும்பூருக்கு பகல் 1.50 மணிக்கும் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டணம்: 

வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு இன்று(செப்.23) நிலையில் சென்னை - திருநெல்வேலி இடையிலான உத்தேச பயணக் கட்டணம் வெளியாகியுள்ளது. இதில் இருக்கை வசதி கொண்ட குளிா்சாதன பெட்டியில் (ஏசி சோ் காா்) பயணக் கட்டணமாக ரூ.1,155, முன்பதிவுக் கட்டணம் ரூ.40, அதிவேக ரயிலுக்கான கட்டணம் ரூ.45, உணவு மற்றும் சிற்றுண்டிக்கு ரூ.308, ஜிஎஸ்டி வரி ரூ.62 என மொத்தமாக ரூ.1,610 வசூலிக்கப்படும்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory