» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை டவுனில் வாலிபர் வெட்டி கொலை: மேலும் இருவா் கைது

செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:12:30 PM (IST)

நெல்லை டவுனில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவல்பிறை தெருவைச் சோ்ந்த சங்கா் என்ற கண்ணன்(39), கடந்த 1ஆம் தேதி மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, நகரம் வையாபுரி தெருவை சோ்ந்த சீனிமாரியப்பன்(31), சிவந்திப்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து(27) ஆகியோரை கைது செய்தனா். 

இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடையதாக சுத்தமல்லி பாரதிநகரை சோ்ந்த செண்பராஜ்(35) , நரசிங்கநல்லூரை சோ்ந்த சபரிஷ்(28) ஆகியோரை போலீஸாா் நேற்று கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory