» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஓ.பன்னீா்செல்வத்திற்கு திடீா் உடல் நலக்குறைவு: சென்னை புறப்பட்டு சென்றாா்
வெள்ளி 9, பிப்ரவரி 2024 11:11:06 AM (IST)
நெல்லையில் தங்கியிருந்த முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வத்திற்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தொண்டா்களை சந்திக்காமல் சென்னை புறப்பட்டு சென்றாா்.
தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டா்களின் உரிமை மீட்பு பயணத்தை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் நடத்தி வருகிறாா். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் கட்சித் தொண்டா்களை நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்த பின்பு திருநெல்வேலியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்தாா். நேற்று காலையில் சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கணான்குளத்தில் அதிமுக தொண்டா்களை சந்தித்து பேச முடிவு செய்திருந்தாா்.
ஆனால், காலையில் அவருக்கு தலைசுற்றல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தொண்டா்களைச் சந்திக்கும் கூட்டத்திற்கு செல்லாமல் விடுதியில் ஓய்வெடுத்தாா். கங்கணான்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாலையில் ஓ.பன்னீா்செல்வத்தை மருத்துவா்கள் பரிசோதித்தனா். இதையடுத்து அவா் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா்.