» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளை.,யில் 17ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 10, பிப்ரவரி 2024 12:28:55 PM (IST)
பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வருகிற 17ஆம் தேதி (சனிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 17.02.2024 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை புனித யோவான் கல்லூரி (St. John’s College) பாளையங்கோட்டையில் வைத்து நடைபெறவுள்ளது.இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுய விபரம் (Resume), கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 09.00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு அரசு தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்களும் (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும். மேலும், வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel –இல் இணைந்து பயன்பெறலாம்.
இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு இரத்து செய்யப்படமாட்டாது எனவும் வேலைநாடுநர்கள் இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் தோல்வியால் விபரீத முடிவு : அ.தி.மு.க. தொண்டர் தற்கொலை!
செவ்வாய் 5, மே 2026 12:51:25 PM (IST)

தென்காசியில் 4 தொகுதிகளைக் கைப்பற்றிய திமுக கூட்டணி: சங்கரன்கோவில் அதிமுக வசமானது!
செவ்வாய் 5, மே 2026 8:52:28 AM (IST)

நெல்லையில் 3 தொகுதிகளைக் கைப்பற்றி தவெக அசத்தல்: பாளையைத் தக்கவைத்த திமுக!
செவ்வாய் 5, மே 2026 8:39:37 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தவெக ஆதிக்கம்: அம்பையில் அதிமுக முன்னிலை!
திங்கள் 4, மே 2026 12:41:03 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை: அப்பாவு பின்னடைவு!
திங்கள் 4, மே 2026 11:04:50 AM (IST)

கோடை விடுமுறை எதிரொலி: நெல்லை, கோவை வந்தே பாரத் ரயில்களில் ஜூன் வரை இடமில்லை!
சனி 2, மே 2026 3:41:41 PM (IST)


