» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர் செல்வம் போன்று தென்காசில் 5 கிருஷ்ண சாமிகள்!!

வியாழன் 28, மார்ச் 2024 4:37:45 PM (IST)

ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர் செல்வம் போன்று தென்காசி பாராளுமன்ற தொகுதியில் கிருஷ்ணசாமி என்ற பெயருடைய 5பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிடுகிறார். இதனையொட்டி அவர் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அவரது பெயரை போலவே பெயர் கொண்ட மேலும் 4 பேர் நேற்று சுயேட்சைகளாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதன்படி புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை தவிர்த்து, கேசவபுரம் கடஞ்சிகுளத்தை சேர்ந்த பா.கிருஷ்ணசாமி, சிவகிரி விஸ்வநாதபேரி காந்தி காலனியை சேர்ந்த மூ.கிருஷ்ணசாமி, சங்கரன்கோவில் கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்த க.கிருஷ்ணசாமி, சிதம்பராபுரம் மலையன்குளம் பகுதியை சேர்ந்த வெ.கிருஷ்ணசாமி (45) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் ஒரே நாளில் கிருஷ்ணசாமி என்ற ஒரே பெயரை கொண்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory