» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஜான் பாண்டியன் புகார் எதிரொலி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தில் சோதனை
வெள்ளி 12, ஏப்ரல் 2024 9:22:41 PM (IST)

அமைச்சர் உதயநிதி வாகனத்தில் கோடிக்கணக்கில் பணம் கொண்டு வரப்பட்டுள்ளது என தென்காசி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் குற்றச்சாட்டு தெரிவித்ததை அடுத்து அமைச்சரின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க.,கூட்டணி வேட்பாளர் தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பத்திரிக்கை யாளர்களிடம் கூறிய போது, தென்காசி தொகுதிக்கு தேர்தல் பரப்புரைக்கு அமைச்சர் உதயநிதி வருகிறார். இவரை வரவேற்பதற்காக 35 அடிக்கு மேல் கொடிக்கம்பங்கள் அதிக அளவில் நடப்பட்டுள்ளன. குத்துக்கல்வலசை ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் எங்களது பிரச்சார நிர்வாகி வாகனத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் உதயநிதி வாகனத்தில் பலகோடி ரூபாய் கொண்டு வந்து கொடுப்பதற்கு தான் கூட்டத்தை கூட்டி உள்ளனர். இதனை யார் போய் சோதனை செய்வது. எங்களது வாகனத்தை பலமுறை சோதனை செய்துள்ளனர். முன்பு சங்கரன்கோவில் எம்.எல்.ஏ., ராஜா வந்த வாகனத்தை சோதனை செய்யவில்லை. அதற்காக பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உதயநிதி வரும் வாகனத்தை சோதனை செய்யக் கூடாதா?அமைச்சருக்கு ஒரு நீதி. பாமர மக்களுக்கு ஒரு நீதியா? ரொம்ப அராஜகத்தில் திமுக ஈடுபட்டுள்ளது. தாமரை வெற்றி பெற்று விடும். ஜான் பாண்டியன் வெற்றி பெற்றுவிடுவார் என்ற பயம்தான் திமுகவிற்கு உள்ளது. ஒரு ஆளுக்கு ஐயாயிரம் ரூபாயாவது கொடுத்து வெற்றி பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் திமுக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. என ஜான் பாண்டியன் கூறினார்.
இதன் எதிரொலியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு கோவில்பட்டிக்கு செல்லும் வழியில் கரட்டுமலை சோதனைச் சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த வாகனம் நிறுத்தப்பட்டு தேர்தல் பறக்கும் படையினரால் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த வாகனத்தில் குறிப்பிடும்படி எதுவும் சிக்கவில்லை. தென்காசி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் கூறிய குற்றச்சாட்டை அடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிபத்து எதிரொலி : அனுமதியின்றி இயங்கிய தீப்பெட்டி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 12:02:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)

பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் போராட்டம்!!
திங்கள் 17, பிப்ரவரி 2025 3:31:23 PM (IST)
