» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கியதாக பாஜக பிரமுகர் கைது
சனி 13, ஏப்ரல் 2024 3:14:06 PM (IST)
நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கியதாக பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை திம்மராஜபுரத்தில் பயணிகளை ஏற்றியபோது பேருந்தில் பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் பாஜக சின்னத்தை ஒட்ட முயன்றாராம். இதனை நடத்துனர் பாஸ்கர் தடுக்க முயன்றதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ஓட்டுநர் சுப்பிரமணியன் மீது சோடா பாட்டிலால் தாக்கிவிட்டு மருதுபாண்டியன் தப்பியோடி விட்டாராம். இதுகுறித்து புகாரின் பேரில் மருதுபாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது - கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.