» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: தூத்துக்குடிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!!

வியாழன் 16, மே 2024 3:27:01 PM (IST)

தமிழகத்தில் நெல்லை, குமரி உட்பட 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் 7 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்றைய மழைப்பொழிவு குறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:

7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:

* கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 7 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்.

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:

* தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்:

* ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பாளையில் பள்ளி மாணவன் திடீர் மாயம்

வியாழன் 13, ஜூன் 2024 11:29:37 AM (IST)


Sponsored Ads




Tirunelveli Business Directory