» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 10ஆம் தேதி குறை தீர்க்கும் முகாம் - ஆணையர் தகவல்!
திங்கள் 8, ஜூலை 2024 4:03:02 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் வருகிற 10ஆம் தேதி பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் அளிக்கும் முகாம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் பகுதி சபா கூட்டங்களும் உரிய காலங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. முகாமானது வருகின்ற 10/07/2024 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேற்கு மண்டலத்திற்குட்பட்ட (வார்டு எண்கள் 15 முதல் 19, 30 முதல் 37, 42, 44 ) மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ( வார்டு எண்கள் 50 , 51) ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது.
மேற்படி முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு,தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை மாண்புமிகு மேயர் அவர்களிடம் அளிக்கலாம். எனவே, மேற்படி முகாம்களில் பொதுமக்கள் தாங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கி பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொக்கிரகுளத்தில் புதிய ஆதார் சேவை மையம் : ஆட்சியர் இரா.சுகுமார் திறந்து வைத்தார்
வியாழன் 21, மே 2026 4:38:35 PM (IST)

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்..? மண்டல மேலாளர் மறுப்பு; 2 பேர் பணிநீக்கம்!
வியாழன் 21, மே 2026 11:20:26 AM (IST)

விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)



த. மயில்ராஜாJul 8, 2024 - 08:37:57 PM | Posted IP 162.1*****