» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்தில் 2-வது நாளாக குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
திங்கள் 29, ஜூலை 2024 11:57:15 AM (IST)
குற்றாலத்தில் அருவிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று 2வது நாளாக குளிப்பதற்கு தடை நீடிக்கிறது.
தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று மாலையில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது.
ஒருகட்டத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் 5 கிளைகளும் ஒருசேர காட்சியளிக்கும் அளவு தண்ணீர் காட்டாற்று வெள்ளம்போல் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இதனால் நேற்று விடுமுறை நாளில் குடும்பத்துடன் குளிக்க வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயினருவிகளில் வெள்ளப்பெருக்கை தூரத்தில் நின்று பார்த்து ரசித்துவிட்டு சென்றனர். தொடர்ந்து இரவு முழுவதும் மலைப்பகுதியில் மழை பெய்தவண்ணம் இருந்ததால் வெள்ளப்பெருக்கு குறைய வில்லை.
இந்நிலையில் இன்று காலையில் மலைப்பகுதியில் சாரல் மழை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவில் சற்று தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் குளிப்பதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் விழுந்து வருகிறது. எனவே அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை நீடிக்கிறது. அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் உடனடியாக குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் 2026: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதச் சங்கிலி!
புதன் 18, மார்ச் 2026 3:28:16 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழா: நெல்லை மாவட்டத்திற்கு ஏப். 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
புதன் 18, மார்ச் 2026 12:51:02 PM (IST)

கடன் தொல்லையால் விபரீத முடிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
புதன் 18, மார்ச் 2026 10:26:15 AM (IST)

அரசுப் பணம் கையாடல் புகார்: புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
புதன் 18, மார்ச் 2026 10:16:10 AM (IST)

நாங்குநேரி அருகே விவசாயி வெட்டிக்கொலை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
புதன் 18, மார்ச் 2026 8:27:31 AM (IST)

வேட்புமனு படிவங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி: ஆட்சியர் இரா. சுகுமார் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:52:43 PM (IST)

