» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சியுடன் கோராம்பள்ளம் பஞ்சாயத்தை இணைக்க மக்கள் எதிர்ப்பு!
திங்கள் 30, செப்டம்பர் 2024 3:46:39 PM (IST)

கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரம்பள்ளம் பஞ்சாயத்தற்கு உட்பட்ட கோ.சுப்பிரமணியபுரம், வடக்கு காலான்கரை, பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வசித்து வருகிறோம். விவசாயம், கூலி வேலை மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறாேம்.
கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு இணைத்தால் 100 நாள் வேலை பறிபோய்விடும். எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும். வீட்டு வாடகை உயரும். இதனால் மக்கள் பல சிரமத்திற்கு ஆாளாக நேரிடும். எனவே கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூாது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
சீ.அ.சுகுமாரன்.Sep 30, 2024 - 09:21:09 PM | Posted IP 172.7*****
இவர்கள் பலநூறு நாட்கள் வேலை பார்த்தும் சம்பளம் வாங்கும் ஒரு வேலையைத்தவிர வேறு எந்த வேலையும் செய்த்தாகத் தெரியவில்லையே?
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டி: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 29, ஜனவரி 2026 4:43:56 PM (IST)

கல்லிடைக்குறிச்சி மகளிர் அரபிக் கல்லூரியில் 11ஆவது பட்டமளிப்பு விழா
வியாழன் 29, ஜனவரி 2026 8:21:27 AM (IST)

திருநெல்வேலியில் 2480 தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!
புதன் 28, ஜனவரி 2026 5:27:33 PM (IST)

கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: டிரைவர் படுகாயம்
புதன் 28, ஜனவரி 2026 8:33:50 AM (IST)

மூதாட்டியை அடித்துக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
செவ்வாய் 27, ஜனவரி 2026 9:24:25 PM (IST)

கர்ப்பிணி பெண் மர்மசாவில் திடீர் திருப்பம்: கொலை செய்து நாடகமாடிய அரசு ஊழியர் கைது!
செவ்வாய் 27, ஜனவரி 2026 7:48:56 AM (IST)


அறம் செய்ய விரும்புOct 2, 2024 - 09:52:37 PM | Posted IP 172.7*****