» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி சாம்பியன்
செவ்வாய் 29, அக்டோபர் 2024 4:59:27 PM (IST)

தென்காசி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தென்காசி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இப்போட்டிகளில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிர் ஷமஸ் நவீன் 100 மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் முதலிடமும், இப்பள்ளி மாணவர் சக்தி சர்வேஷ் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் முதலிடமும், மாணவர் முகமது இலியாஸ் நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும், 80 மீ தடை தாண்டி ஓடுதலில் மூன்றாமிடமும், மாணவர் பிரபாகர் 400மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், 600 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர்.
17 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் இப்பள்ளி மாணவர் முகமது உவைஸ் முகைதீன் 100 மீ ஓட்டத்தில் முதலிடமும், 200 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றனர். 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இப்பள்ளி மாணவர் முகமது அக்ஸின் 100, 200மீ, 400மீ ஓட்டங்களில் முதலிடமும், 4 க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 4க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர் மதீஸ் 400 மீ தடை தாண்டி ஓடுதல் மற்றும் 800 மீ ஓட்டத்தில் முதலிடமும், 4 க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 4க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர் சுப சக்திவேல் 4 க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 4 க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர் லோகேஷ் 4க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றனர்.
17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் இப்பள்ளி மாணவி மாணிக்க ஸ்ரீ 800 மீ, 1500மீ, 3000 மீ ஓட்டங்களில் முதலிடம் பெற்றார். முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
மாணவர்கள் ஷமஸ் நீவன், சக்தி சர்வேஸ், முகமது அக்ஸின் மற்றும் மாணவி மாணிக்க ஸ்ரீ ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், நாராயணன், ராமர், சதீஸ்குமார், கலையரசன், பால்மதி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)
