» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோழிப்பண்ணையில் கணவன்-மனைவி மர்ம மரணம் : போலீசார் விசாரணை
செவ்வாய் 26, நவம்பர் 2024 8:20:37 AM (IST)
கடையநல்லூர் அருகே கோழிப்பண்ணையில் கணவன்-மனைவி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ஏமன்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (42). இவருடைய மனைவி ஜோதிலட்சுமி (37). இவர்களுக்கு பிரியா (22), வெண்ணிலா (20), சுமித்ரா (17) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். கடையநல்லூர் அருகே கரடிகுளம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் கணேசன் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். 2-வது மகள் வெண்ணிலாவுக்கு திருமணமாகி விட்டது. அவரும் கணவருடன் சேர்ந்து அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்தார்.
கணேசன்-ஜோதிலட்சுமி தம்பதியர் ஒரு கோழிப்பண்ணையிலும், பிரியா, சுமித்ரா, அவர்களுடைய பாட்டி ஆகியோர் மற்றொரு கோழிப்பண்ணையிலும், வெண்ணிலா கணவருடன் இன்னொரு கோழிப்பண்ணையிலும் வேலை செய்தனர்.
கடந்த 21-ந்தேதி கணேசன்-ஜோதிலட்சுமி தம்பதியர் வழக்கம்போல் வேலை செய்து விட்டு கோழிப்பண்ணையில் உள்ள வீட்டில் தூங்க சென்றனர். மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் காவலாளி, வீட்டின் கதவை தட்டினார். ஆனாலும் அவர்கள் திறக்கவில்லை.
எனவே பக்கத்து கோழிப்பண்ணையில் வேலை செய்த சுமித்ராவை வரவழைத்து, வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டில் ஜோதிலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததையும், கணேசன் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கணேசனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஜோதிலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கணேசன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். கணவன்-மனைவி மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்தனரா? அல்லது சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவர்கள் எப்படி இறந்தனர்? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:10:26 PM (IST)
