» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலீசார் வாகன சோதனையால் போக்குவரத்து நெருக்கடி : வாகன ஓட்டிகள் அவதி!

செவ்வாய் 26, நவம்பர் 2024 11:18:59 AM (IST)



திருநெல்வேலியில் போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இருந்து டவுன் வழியாக தென்காசிக்கு செல்லும் சாலை படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி செ செல்லும் வழியான வழுக்கு ஓடை ரோட்டில் போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் வாகனங்களை சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக நிறுத்தி சோதனை செய்து வருகின்றன. 

இந்தசாலை ஒரு வழிப்பாதையாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் சுமார் 1 கிமீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் நேர விரயம் ஏற்படுவதாகவும், போக்குவரத்து போலீசார் சமீபகாலமாக வாகன சோதனை என்ற பெயரில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory