» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பஸ் நிலையம் அருகில் தரையில் கிடக்கும் மின் மீட்டர் மெயின் பாக்ஸ்: விபத்து அபாயம்!
திங்கள் 6, ஜனவரி 2025 9:17:08 PM (IST)

சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகில் தரையில் கிடக்கும் மீட்டர் மற்றும் மெயின் பாக்சால் விபத்து உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகில் திமுக பிரமுகர் இ. கெங்கை ஆதித்தன் வீடு உள்ளிட்ட குடியிருப்பு வீடுகளும், வணிக கடைகளும் உள்ளன. எதிரே பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. எந்நேரமும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் காணப்படுகிறது. கெங்கை ஆதித்தன் அவரது கடைக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அவரது கடையில் மின் மீட்டர் மற்றும் மெயின் பாக்ஸ் அமைக்க ஏற்பாடுகள் செய்து தயார் நிலையில் வைத்து உள்ளார். ஆனால் மின்வாரியத்தினர் கெங்கைஆதித்தன் சகோதரர்களுக்கிடையே பிரச்சனை காரணமாக அதனை மின்வாரியம் மாற்ற மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் மின் இணைப்புடன் கூடிய மீட்டர் பாக்ஸ், மெயின் பாக்ஸ் ஆகியவை தரையில் வைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்தே கடைக்கு மின் சப்ளையும் வழங்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகள் ஆட்கள் மற்றும் கால்நடைகள் சென்றாலும் மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மழை பெய்தாலும் அப் பகுதியில் தண்ணீர் தேங்கி மின் கசிவு ஏற்பட்டு விபத்து விபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. ஆதலால் மின்வாரிய அதிகாரிகள் இதனை கவனித்து தரையில் காணப்படும் மின் மீட்டர் பெட்டி, மற்றும் மெயின் பாக்ஸ் பெட்டியை பாதுகாப்பான முறையில் அமைத்து மின் சப்ளை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

இது தான்Jan 7, 2025 - 11:45:58 AM | Posted IP 162.1*****