» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 20-க்கும் மேற்பட்டோர் காயம்!
புதன் 8, ஜனவரி 2025 10:14:10 AM (IST)

நெல்லையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும, 35பேர் காயம் அடைந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து, நாகர்கோவில் நோக்கி இன்று (ஜன. 8) காலை சென்றுக்கொண்டு இருந்தபோது இவ்விபத்து ஏற்பட்டது. இந்த பேருந்தில் 37 பேர் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பஸ் நெல்லை டக்கரம்மாள்புரம் அருகே வந்த போது பஸ் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த நெல்லை மாவட்டம் கூட்டப்புளி லெவிஞ்சிபுரம் பெரிய தெருவைச் சேர்ந்த பிரிஸ்கோ (64) என்பவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 35பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஓட்டுநர் திடீரென தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிரான்ஸ்பார்மர்கள் திருடிய லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:29:29 AM (IST)

திருநெல்வேலி மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் : பொதுப் பார்வையாளர்கள் - ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 23, மார்ச் 2026 4:48:07 PM (IST)

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கச் சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்!
திங்கள் 23, மார்ச் 2026 4:38:08 PM (IST)

தந்தை கொலையில் குற்றவாளிகள் பிடிபடாததால் விரக்தி: மகள் தற்கொலை!
திங்கள் 23, மார்ச் 2026 12:34:43 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
திங்கள் 23, மார்ச் 2026 12:31:04 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 26-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 23, மார்ச் 2026 10:36:36 AM (IST)

