» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தொழிலதிபர் வீட்டில் ரூ.1½ கோடி தங்க நாணயம் கொள்ளை; பணிப்பெண் உட்பட 3 பேர் கைது!

திங்கள் 20, ஜனவரி 2025 8:43:11 AM (IST)

பாளையங்கோட்டை தொழிலதிபர் வீட்டில் ரூ.1½ கோடி தங்க நாணயங்கள் கொள்ளையடித்த வழக்கில் பணிப்பெண் உள்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.

பாளையங்கோட்டை வடக்கு ஐகிரவுண்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன் (42). இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.1½ கோடி மதிப்புள்ள 2¼ கிலோ தங்க நாணயங்கள் திடீரென்று மாயமானது.

இதுகுறித்து அவர் ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ரஞ்சன் வீட்டில் வேலை பார்த்து வந்த அண்ணா நகரை சேர்ந்த சுபிதா (38) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. 

அவரை ரகசியமாக கண்காணித்து விசாரித்தனர். இதில் அவர் தங்க நாணயங்களை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், தற்போது பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் வசித்து வரும் சுபிதா, திருடிய நாணயங்களை விற்ற பணத்தில் அந்த பகுதியில் ரூ.30 லட்சத்தில் சொகுசு வீடு கட்டியதும் தெரியவந்தது.

அவருக்கு உடந்தையாக கோட்டூரை சேர்ந்த உறவினர் ஆயிஷா (42) மற்றும் இவருடைய கணவர் பீர் (42) ஆகிய 2 பேரும் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு வீடு மற்றும் 60 பவுன் நகைகளை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகினறனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory