» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பீகார் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்பது இதுவே முதல்முறை: கனிமொழி எம்பி கருத்து!
சனி 1, பிப்ரவரி 2025 5:13:50 PM (IST)
என்னுடைய அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிவிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்று விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக தரப்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்பி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "என் அரசியல் அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் அமர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறி இருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், "பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
UNMAIFeb 3, 2025 - 02:57:51 PM | Posted IP 172.7*****
TN 39 MPs DOING ANYTHING FOR TAMILANS? WASTE......
MmmmFeb 1, 2025 - 05:39:07 PM | Posted IP 172.7*****
Supper akka
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

அந்தFeb 4, 2025 - 03:06:25 PM | Posted IP 162.1*****