» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறந்த மொழிபெயர்ப்பு: நெல்லை பேராசிரியைக்கு சாகித்ய அகாடமி விருது!
சனி 8, மார்ச் 2025 5:51:09 PM (IST)
பாளை., தூய சவேரியார் கல்லூரி பேராசிரியை விமலா, சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. மலையாள எழுத்தாளர் நளினி ஜமிலா எழுதிய ‘என்ட ஆண்கள்’ என்ற நூலை ‘எனது ஆண்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த படைப்பாளர் பேராசிரியர் விமலா சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளார். ‘எனது ஆண்கள்’ நூல் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விமலா, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியையாக பணியாற்றுகிறார். மிகவும் எளிய பின்னணி கொண்ட விமலா, டெல்லியில் உள்ள ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி படிப்பை பயின்றார். இதுவரை 4 நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
மொழி பெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது குறித்து விமலா கூறும்போது, "நான் இளங்கலை பட்டப் படிப்பை தொலைதூரக் கல்வியில் படித்ததால், பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் எனக்கு ஆராய்ச்சி படிப்பில் இடம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில்தான் ஜேஎன்யு பல்கலைக்கழகம் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது. அங்கு ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள 2 மொழிகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நான் மலையாளத்தை கற்றுக்கொண்டேன். அதன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து, மொழிபெயர்ப்பு பணியை தொடங்கினேன்.
மொழிபெயர்ப்பு என்பது எனக்கு மிகவும் விருப்பமான பணி. அந்த வகையில் நளினி ஜமீலா எழுதிய ‘என்டே ஆண்கள்’ நூலை தமிழில் மொழி பெயர்த்தேன். தற்போது எனக்கு சாகித்ய அகடமி விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை எனது அம்மாவுக்கும் உறவினர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். அப்பா இல்லாமல் எனது அம்மா, மருத்துவமனையில் வெந்நீர் வழங்கும் வேலை செய்து என்னை வளர்த்தார். ஒரு முறை அம்மாவின் இடுப்பில் வெந்நீரின் வெப்பத்தால் புண் ஏற்பட்டதை பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்,” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, மார்ச் 2025 8:39:51 AM (IST)

மிக கனமழை எச்சரிக்கை முன்னேற்பாடு பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
திங்கள் 10, மார்ச் 2025 7:59:52 PM (IST)

போலீஸ் ஏட்டு மனைவிக்கு பாலியல் தொந்தரவு: சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது
ஞாயிறு 9, மார்ச் 2025 7:18:06 PM (IST)

அம்பை தலைமை அஞ்சலகத்தில் சர்வதேச மகளிர் தினம்
ஞாயிறு 9, மார்ச் 2025 9:04:29 AM (IST)
