» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தங்கை கணவரை தாக்கியதாக மைத்துனர் கைது

திங்கள் 24, மார்ச் 2025 8:46:54 AM (IST)

திசையன்விளை தங்கையின் கணவரை தாக்கியதாக  அவரது மைத்துனரை போலீசார்  கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடியைசேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வெள்ளப்பாண்டி(40) தொழிலாளி. இவருக்கும் சாத்தான்குளம் அருகே புத்தன் தருவை சேர்ந்த சங்கரன் மகளுக்கும் திருமணம் முடிந்துள்ளது. இதனிடையே வெள்ளப்பாண்டி மற்றும் மாமனார் சங்கரன் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில்சங்கரன், பேச்சுவார்த்தை நடத்த வீட்டுக்கு வருமாறு வெள்ளப்பாண்டியிடம் போனில் கூறியுள்ளார். இதையடுத்து வெள்ளப்பாண்டி, கடந்த 21ம் தேதி தனது மாமனார்ச ங்கரன் வீட்டுக்குசென்றார். அப்போது வெள்ளப்பாண்டி மனைவியின் சகோதரர் முத்துசாமி (40) என்பவர் வெள்ளப்பாண்டியை அவதூறாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
 
இதுதொடர்பாக  வெள்ளப்பாண்டி, தட்டார்மடம்  காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர்ர் அனிதா வழக்குபதிந்து  வெள்ளப்பாண்டியை  தாக்கிய  முத்துசாமியை  கைதுசெய்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory