» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி துவக்கம்

புதன் 2, ஏப்ரல் 2025 5:56:01 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக தேர்வான தீயணைப்பு வீரர்களுக்கான 90 நாள் பயிற்சி நெல்லை இன்ஜினியரிங் கல்லூரியில் இன்று தொடங்கியது. 

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தேர்வான 672 புதிய தீயணைப்பு வீரர்களுக்கான மூன்று மாத கால பயிற்சியானது மாநிலம் முழுவதும் ஏழு மாவட்டங்களில் இன்று முதல் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியானது திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்றடைப்பு அருகே உள்ள மருதகுளத்தில் நெல்லை இன்ஜினியரிங் கல்லூரியில் வைத்து 97 தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பயிற்சியினை திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர் சரவண பாபு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். திருநெல்வேலி தீயணைப்பு வீரர்களுக்கான தற்காலிக பயிற்சி மையத்தின் முதல்வரும் திருநெல்வேலி மாவட்ட தீயனைப்பு அலுவலருமான பானுப்பிரியா, கன்னியாகுமரி மாவட்ட அலுவலர் சத்திய குமார், தூத்துக்குடி மாவட்ட அலுவலர் கணேசன், திருநெல்வேலி மாவட்ட உதவி மாவட்ட அலுவலர் திருவெட்டும் பெருமாள், உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் மற்றும் பயிற்சி கொடுக்கக்கூடிய அலுவலர்கள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.

இன்றிலிருந்து தொடங்கி தொடர்ந்து 90 நாட்கள் இந்த பயிற்சியானது நடைபெறும்.  அதில் தீயை அணைப்பது இடிபாடுகளில் உயிர்களை மீட்பது குறித்த அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory