» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 293 பேர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 9:43:24 PM (IST)
நெல்லை டவுனில் அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியைச் சேர்ந்த 68 பெண்கள் உட்பட 293 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்துக்கள் புனிதமாக அணியும் விபூதி பட்டை திருநாமத்தை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி விலக வலியுறுத்தியும், அவரை கைது செய்யக் கோரியும் நெல்லை மாநகரில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா, மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் மாயகூத்தன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் கிருஷ்ண பிரியா முத்துலட்சுமி, ஆனந்தகனி, வெள்ளத்தாய் ஜானகி சாந்தி கண்ணகி, கோட்டத் தலைவர் தங்க மனோகர் கோட்டச் செயலாளர்கள் ஆறுமுகசாமி, கண்ணன், பிரம்மநாயகம், தூத்துக்குடிக்கு மாவட்ட நிர்வாகிகள் இசக்கி, சரவணகுமார், நாராயணராஜ், முத்துக்குமார், ராமர், முருகன், ஆனந்த், ரவிச்சந்திரன், செந்தில், வெங்கடேஷ் விருதுநகர் மாவட்டம் பிரபு, சஞ்சீவி, வினோத் வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில நிர்வாகி பந்தல் ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 68 பெண்கள் உட்பட 293பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை: இளம்பெண் கைது
சனி 19, ஏப்ரல் 2025 9:03:58 AM (IST)

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)
