» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)
புளியங்குடியில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி நவாச்சாலையில் ஊருக்கு வெளியே வயல்வெளி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், இரும்பு கம்பியால் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள், கடையில் இருந்த விலை உயர்ந்த ரக மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். பணத்தை கடை ஊழியர்கள், பாதுகாப்பு கருதி தங்கள் பொறுப்பில் எடுத்துச்சென்றதால் அந்த பணம் தப்பியது. மேலும், கொள்ளையர்கள் தங்களை அடையாளம் காண முடியாத அளவில் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
நேற்று அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது டாஸ்மாக் கடையில் கதவு திறந்து கிடந்ததை பார்த்து ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து கடைக்குள் சென்று பார்த்தனர். அப்போது மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
