» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆன்லைன் மூலம் புகார் கொடுத்தால் மாநகராட்சி பணியாளர்கள் வீடு தேடி வருவார்கள்: மேயர் தகவல்
புதன் 7, மே 2025 5:47:58 PM (IST)
ஆன்லைன் மூலம் பொதுமக்கள் புகாா் கொடுத்தால் பணியாளர்கள் உடனடியாக வீடு தேடி வந்து குறைகளை தீர்ப்பார்கள் என்று மேயர் ஜெகன் பொியசாமி கூறினார்.
தூத்துக்குடி மாநகரட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இணை ஆணையர் சரவணக்குமாா், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் பேசுகையில் "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் 11 மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு மண்டலமாக குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த மண்டலத்தில் இதுவரை 546 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பொறுப்பேற்று நான்கு வருடம் முடிந்து 5ம் வருடம் துவங்கிவிட்டது. எந்த ஒரு குறைகளும் கிடையாது குறைபாடு இல்லாத நிலை தான் உள்ளது. ஆன்லைன் மூலம் பொதுமக்கள் புகாா் கொடுக்கலாம் பணியாளர்கள் உடனடியாக உங்கள் வீடு தேடி வருவார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல ஊக்கம் வந்து பொதுமக்கள் ஊக்கத்தால் நூறு சதவீதம் பணிகளை முழுமையாக செய்து கொடுப்போம் எந்த சலசலப்புக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். கடந்த வாரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் எனது பந்தலை மாநகராட்சி அதிகாரிகள் பிரித்து விட்டார்கள் என்று கூறினார்கள் மக்களுக்கு பணி செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு.
சட்டத்திற்குட்பட்டு பேருந்து நிலையத்திற்கு தினசரி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கிறார்கள் அந்த இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனுமதியும் பெறவில்லை மாநகராட்சி சார்பில் 10 இடங்களில் குடிநீர்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைவர் உத்தரவின் பேரிலும் நாங்களும் குடிநீர் பந்தல் அமைத்துள்ளோம்.
இந்த வாசல் முன்பு வந்து பந்தல் அமைத்தால் அதிகாரிகள் அப்புறப்படுத்த தான் செய்வார்கள் அனுமதி யார் கேட்டாலும் கொடுக்கப்படும். பேருக்கு மட்டும் விளம்பரம் வைத்து சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதார கேடாக நடத்தக்கூடாது தவறான தகவல்களை பரப்பக்கூடாது.
பாதாள சாக்கடை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 20 சதவீத பணிகளும் விரைவாக செய்து கொடுக்கப்படும். அதே போல் மாநகராட்சி கழிவு நீர் சுத்தகாிப்பு பணிகளை சாக்கடைக்குள் இறங்காமல் மிஷின் மூலம் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும் உள்ளே இறங்கி பணியாளா்கள் வேலை செய்ய வேண்டிய நிலை தற்போது இல்லை என்று மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.
கூட்டத்தில் பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி ஆணையர் சுரேஷ்குமார், நகர அமைப்பு திட்ட பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன், நகர்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகா், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், ககவுன்சிலர்கள் தெய்வேந்திரன், நாகேஸ்வாி, ஜெயசீலி, கற்பககனி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், வட்டச்செயலாளர் ரவீந்திரன், வட்டப்பிரதிநிதி புஷ்பராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ேஜஸ்பர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேகா், சுகாதார ஆய்வாளர் ராஜசேகா், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆலங்குளம் திமுக பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்: சொத்துவரி தாமதமாக செலுத்தியதால் அதிரடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:38:04 AM (IST)

நெல்லை முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது : வருகிற 27-ஆம் தேதி சூரசம்ஹாரம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:35:20 AM (IST)

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2¼ அடி உயர்ந்தது!
புதன் 22, அக்டோபர் 2025 8:55:10 AM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:09:49 PM (IST)

சாராயம் குடித்ததைப் போல ஆடாதீர்கள்: ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் அட்வைஸ்!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 3:39:28 PM (IST)





மக்கள்மே 7, 2025 - 10:36:40 PM | Posted IP 104.2*****