» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் 6-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலில் கடந்த 2018ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைதொடர்ந்து ஆண்டுதோறும் வருஷாபிசேக விழா நடைபெறுவது வழக்கம். 7வது ஆண்டுக்கான வருஷாபிஷேகம் இன்று காலையில் நடைபெற்றது.
இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் சன்னதியில் 1008 சங்குகளும் சுவாமி சன்னதியில் 108 கலசம் வைத்தும் சிறப்பு ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது. காலை 9.00.மணிக்கு மேல் 10.30. மணிக்குள் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் ஸ்ரீ ஆறுமுக நயினார், மூல மகாலிங்கம் உள்ளிட்ட சன்னதி விமானங்களுக்கு வருஷாபிசேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 12:36:14 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 10, நவம்பர் 2025 10:12:41 AM (IST)

மாலியில் கடையநல்லூர் தொழிலாளர்கள் கடத்தல் : குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை!
திங்கள் 10, நவம்பர் 2025 10:09:20 AM (IST)

ஆசிரியைகளிடம் 160 பவுன், ரூ.31½ லட்சம் நூதன மோசடி: பெண்கள் உள்பட 4 பேர் கைது
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:13:59 AM (IST)

பைந்தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டு விழா!
சனி 8, நவம்பர் 2025 10:52:49 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
சனி 8, நவம்பர் 2025 8:47:30 AM (IST)




