» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்!

வியாழன் 17, ஜூலை 2025 7:51:44 PM (IST)



தூத்துக்குடியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் 3 இறந்தன. 15க்கும் மேற்பட்ட ஆடுகள் கவலைக்கிடமாக உள்ளன. 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி பகுதியில் ஏராளமானோர் ஆடுகள் வளர்த்து வருகிறார்கள். இதில் இன்று 100க்கும் மேற்பட்ட ஆடுகள் அங்குள்ள பள்ளிக்கு எதிர்ப்புறம் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான மில்லுக்குள் சென்று மேய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மில்லில் இருந்து வெளிவந்த ஆடுகள் திடீரென மயங்கி விழுந்தன. இதில் 2 ஆடுகள் அடுத்தடுத்து இறந்தன. 

மற்ற ஆடுகள் உயிருக்கு போராடின. இது குறித்து தகவல் அறிந்து ஆடு வளர்ப்பவர்கள் அங்கு வந்து ஆடுகளை மீட்டு அங்கு உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதனை டாக்டர்கள் ஆடுகள் தவுடுவுடன் குருணை மருந்தை கலந்து சாப்பிட்டு உள்ளது என்றும் இதனால் ஆடுகள் இறந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். 

இதில், 15க்கு மேற்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே ஆடுகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலியாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுடப்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

Naan thaanJul 18, 2025 - 10:37:41 AM | Posted IP 162.1*****

வீதியில் மேயும் ஆடுகளை தன் தோட்டத்துக்குள் ஏவி விட்டு ஊர்கூடி ஆட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கும் மேன்மக்கள் உள்ள ஊர் தான் மாப்பிளையூரணி....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory